Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும் தன்னை கொண்ட சாம்பிராணி புகை

உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும் தன்னை கொண்ட சாம்பிராணி புகை

By: Nagaraj Wed, 14 Dec 2022 9:53:08 PM

உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும் தன்னை கொண்ட சாம்பிராணி புகை

சென்னை: சாம்பிராணிப் புகை, உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும். தலையில் இந்தப் புகையைக் காட்டினால், தலைமுடி கறுப்பாக வளரும். மேலும் பெண்களின் கருப்பை சார்ந்த பாதிப்புகளையும் சரி செய்யும்.

சாம்பிராணிப் பிசினில் உள்ள வேதிப்பொருட்கள், புற்றுநோயைத் தீர்க்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் வீடுகளில் சாம்பிராணியைப் போடச் சொன்னார்கள். வீடுகளில் அடிக்கடி சாம்பிராணிப் புகையைக் காட்டினால் நச்சுக்கிருமிகள் அழிந்து விடும்.


சாம்பிராணி சிறந்த கிருமிநாசினி. இது உடைந்த எலும்புகளை இணைக்கும். சிறுநீரகப் பாதிப்புகளை நீக்கும். சின்ன வெங்காயத்துடன் சாம்பிராணியை அரைத்துத் தடவினால், கட்டிகள், வீக்கங்கள் நீங்கும்.

camphor smoke,homes,chemicals,cancer,impact ,சாம்பிராணி புகை, வீடுகள், வேதிப்பொருட்கள், புற்றுநோய், தாக்கம்

சாம்பிராணியுடன் காய்ந்த வேப்பிலை, நொச்சியிலையைச் சேர்த்துப் புகையிட்டால் கொசுக்கள் ஓடிவிடும்.


சுமங்கலிப் பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் குளித்துவிட்டு தெய்வப் படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பார்கள். குறிப்பாக கண் திருஷ்டி கண்டிப்பாக விலகும்.

Tags :
|
|