Advertisement

திருப்பதி ... இனி இந்த ஆவணங்கள் கட்டாயம்

By: vaithegi Sat, 24 Dec 2022 4:03:16 PM

திருப்பதி    ...  இனி இந்த ஆவணங்கள் கட்டாயம்

சென்னை: 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் .... சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனையடுத்து அந்த நாடுகளில் தடுப்புப்பணியாக ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது. இந்த உத்தரவின் பெயரில் நாடு முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகி கொண்டு வருகிறது.

documents,corona,vaccination ,ஆவணங்கள் ,கொரோனா ,தடுப்பூசி

அந்த வகையில் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது பற்றி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், வரவிருக்கும் 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் கோவிலுக்கு வரும் பொழுது 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|