Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி .. தீபாவளி ஆஸ்தானம் நிகழ்வுக்கான டிக்கெட் இந்த தேதி முதல் வெளியிடப்பட இருக்கிறது

திருப்பதி .. தீபாவளி ஆஸ்தானம் நிகழ்வுக்கான டிக்கெட் இந்த தேதி முதல் வெளியிடப்பட இருக்கிறது

By: vaithegi Mon, 06 Nov 2023 12:52:38 PM

திருப்பதி  ..  தீபாவளி ஆஸ்தானம் நிகழ்வுக்கான டிக்கெட் இந்த தேதி முதல் வெளியிடப்பட இருக்கிறது

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்.

அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வு தங்க வாசல் முன்பாக காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது.

ticket,diwali asthanam,tirupati ,டிக்கெட் ,தீபாவளி ஆஸ்தானம்,திருப்பதி


மேலும், விடுமுறையொட்டி கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதனையடுத்து, தீபாவளி ஆஸ்தானம் நிகழ்வுக்கான டிக்கெட் வருகிற நவ.10 முதல் வெளியிடப்பட இருக்கிறது.

இதையடுத்து இந்த, தீபாவளி ஆஸ்தானம் நிகழ்வையொட்டி, கோவிலில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட பிற சேவைகள் தீபாவளியன்று ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags :
|