Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி டிக்கெட் நாளை விற்பனை செய்யப்படுகிறது

திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி டிக்கெட் நாளை விற்பனை செய்யப்படுகிறது

By: vaithegi Thu, 23 Nov 2023 3:13:18 PM

திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி  டிக்கெட் நாளை விற்பனை செய்யப்படுகிறது


திருவண்ணாமலை : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வருகிற நவம்பர் 26- ம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

ticket sales,thiruvannamalai ,டிக்கெட் ,விற்பனை ,திருவண்ணாமலை

இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பரணி, மகா தீப தரிசனத்திற்கான டிக்கெட் நாளை (24.11.2023) முதல் விற்பனை செய்யப்படுகிறது. காலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்தைக் காண ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும்.

மாலை 6 மணிக்கு மகா தீபத்தைக் காண ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1,000 பேருக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.மேலும் அனுமதி சீட்டுகளை www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணையதளத்தில் நாளை காலை 10 மணி முதல் பெறலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :