Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை பூஜை நேரம் மாற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை பூஜை நேரம் மாற்றம்

By: vaithegi Thu, 15 Dec 2022 6:55:12 PM

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை பூஜை நேரம் மாற்றம்

திருச்செந்தூர் : பூஜை நேரம் மாற்றம் .... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழ் கடவுளான முருகப் பெருமானை வழிபட நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதையடுத்து இந்நிலையில் நாளை மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் நடைபெறும் பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே அதன்படி நாளை முதல் அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பின், 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடத்தப்படும்.

pooja,thiruchendur ,பூஜை ,திருச்செந்தூர்

இதை தொடர்ந்து, அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் சாயரட்சை தீபாராதனை, ராக்கால அபிஷேகம், ஏகாந்த தீபாராதனை, பள்ளியறை தீபாராதனை ஆகிய பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்நேர மாற்றங்கள் வருகிற ஜனவரி 14ம் தேதி வரை அமலில் இருக்கும். ஆனால் ஆங்கில புத்தாண்டு தினம், ஆருத்ரா தரிசனம், தை பொங்கல் தினம் போன்ற முக்கிய நாட்களில் கோவிலின் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :
|