Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி .. ஏப்ரல் மாத தரிசன டிக்கெட்டு நாளை வெளியீடு

திருப்பதி .. ஏப்ரல் மாத தரிசன டிக்கெட்டு நாளை வெளியீடு

By: vaithegi Sun, 26 Mar 2023 1:53:38 PM

திருப்பதி ..   ஏப்ரல் மாத தரிசன டிக்கெட்டு நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்க நாளை இணையதளத்தில் டிக்கெட்டு வெளியீடு .... ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்கள் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் அதிகளவில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வருவர் என்று எதிர்பார்ப்பதால், முன்கூட்டியே ஆர்ஜித சேவைகள்,

இதனை அடுத்து ரூ. 300 சிறப்பு தரிசனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட்டு வருகிறது.

ticket,return ,டிக்கெட்டு ,திருப்பதி

இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை 27-ம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு வரும் ஏப்ரல் மாதம் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக ஆன்லைன் மூலம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வெளியிடவுள்ளது.

எனவே இதற்காக திருப்பதி தேவஸ்தான இணையதளமான tirupatibalaji.ap.gov.in என்கிற இணைய முகவரியிலோ அல்லது திருப்பதி தேவஸ்தானத்தின் TTDDEVASTHANAMS என்கிற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ பக்தர்கள் தங்களது டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|