Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி பிரம்மோற்சவ விழா ..அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி பிரம்மோற்சவ விழா ..அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து தேவஸ்தானம் அறிவிப்பு

By: vaithegi Tue, 06 Sept 2022 4:10:17 PM

திருப்பதி பிரம்மோற்சவ விழா   ..அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதியில் வரும் செப்டம்பர் 7ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை இந்த பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழகம் மற்றும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறை சார்பில் 300 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இந்த விழாவின் போது இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

devasthanam,thirupati,brahmotsava festival ,தேவஸ்தானம் ,திருப்பதி ,பிரம்மோற்சவ விழா

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், வயது முதிர்ந்தவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்ஜித சேவைகள் தரிசனம் ரூ.300 கட்டண தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள் பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம் என அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags :