Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி பிரம்மோத்ஸவம் ..நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி பிரம்மோத்ஸவம் ..நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Thu, 12 Oct 2023 3:32:04 PM

திருப்பதி பிரம்மோத்ஸவம்   ..நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி : சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று SETC அறிவி ... 2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டு முறை "பிரம்மோத்ஸவம்" திருவிழா நடைபெற உள்ளது.

எனவே இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து மேலாண் இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது :- இந்த வருடம் 2023-ல் திருப்பதி, திருமலையில் 2-வது முறையாக நடைபெறவுள்ள "பிரம்மோத்ஸவம்" திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர்,

special buses,brahmotsavam ,சிறப்பு பேருந்துகள் ,பிரம்மோத்ஸவம்


மேலும் சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13/10/2023 முதல் 26/10/2023 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.

இதையடுத்து மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இச்சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :