Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி .. தரிசன டிக்கெட் ஜனவரி 9 தேதி ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி .. தரிசன டிக்கெட் ஜனவரி 9 தேதி ஆன்லைனில் வெளியீடு

By: vaithegi Sat, 07 Jan 2023 2:40:42 PM

திருப்பதி    ..   தரிசன டிக்கெட் ஜனவரி 9 தேதி ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி: ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை பக்தர்கள் வழிபடுவதற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் போன்றயவை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ticket,return ,டிக்கெட் ,திருப்பதி

அந்த வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்து விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டியே தரிசனம் செய்ய டிக்கெட் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

எனவே அதன்படி பக்தர்கள் வழிபடுவதற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து தரிசன டிக்கெட் பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|