Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • புதிய முறையில் லட்டு தயாரிப்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் முடிவு

புதிய முறையில் லட்டு தயாரிப்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் முடிவு

By: vaithegi Sun, 16 Apr 2023 12:13:10 PM

புதிய முறையில் லட்டு தயாரிப்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முறையில் லட்டு தயாரிப்பது பற்றி தேவஸ்தானம் முடிவு .... திருப்பதி ஏழுமலையான் திருத்தலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

இதையடுத்து தினசரி பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 1 மாதத்தில் மட்டும் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

devasthanam,tirupati ,தேவஸ்தானம் ,திருப்பதி

மேலும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதலாகவும் லட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி கொண்டு வருகிறது.

இந்நிலையில் நடைபெற்ற அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த லட்டு பிரசாதத்தை இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags :