Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தரிசன டிக்கெட் குறித்து தகவல் தெரிவித்த திருப்பதி தேவஸ்தானம்

தரிசன டிக்கெட் குறித்து தகவல் தெரிவித்த திருப்பதி தேவஸ்தானம்

By: Nagaraj Sat, 07 Jan 2023 1:16:34 PM

தரிசன டிக்கெட் குறித்து தகவல் தெரிவித்த திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை பக்தர்கள் வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

website,darshan ticket,devotees,booking,notification ,இணையதளம், தரிசன டிக்கெட், பக்தர்கள், முன்பதிவு, அறிவிப்பு

அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்து விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டியே தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை பக்தர்கள் வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தரிசன டிக்கெட் பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :