Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பிரமோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கான பல அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டுவுள்ளது திருப்பதி தேவஸ்தானம்

பிரமோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கான பல அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டுவுள்ளது திருப்பதி தேவஸ்தானம்

By: vaithegi Mon, 04 Sept 2023 1:44:07 PM

பிரமோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கான பல அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டுவுள்ளது திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி : உலகின் பணக்கார கடவுளாக அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பிரமோற்சவம் விழா தொடங்கப்படவுள்ளது. இந்தாண்டு 2 பிரமோற்சவ விழாக்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரமோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளதால் அந்த காலங்களில் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமான பக்தர்களின் வருகை இருக்கும் என தெரிகிறது.

இதனால் திருப்பதி தேவஸ்தானம் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளையும், முன்னேற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. திருப்பதி கோவில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அவர்கள் செய்தியாளர்களிடம் பிரம் உமோற்சவ விழா நாட்களில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

tirupati devasthanam,pramotsava ceremony ,திருப்பதி தேவஸ்தானம்,பிரமோற்சவ விழா

இதையடுத்து நாள்தோறும் ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாட்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார். இலவச தரிசன பக்தர்களுக்கு உணவு, தங்கும் இடம், போக்குவரத்து போன்றவை தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்படும். செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7 மணி அன்று திருப்பதியில் கருட சேவை நடைபெறும் என்பதால் கோயிலுக்கு பைக்குகளில் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வெயில் மற்றும் மழையிலிருந்து பக்தர்களை காக்கும் விதமாக ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூரை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அந்த காலங்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் நலனை கருதி, முன்னெச்சரிக்கையாக மருத்துவ முகாம்கள் திருமலையில் அமைக்கப்படும் எனவும் நிர்வாக அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Tags :