திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்பட்டது
By: vaithegi Sun, 29 Oct 2023 07:01:17 AM
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி 8 மணி நேரத்திற்கு மேல் மூடப்பட்டது. இன்று அதிகாலையில் நிலவும் பகுதி சந்திர கிரகணத்தால் நேற்று இரவு மூடப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்படும். இன்று அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை சந்திர கிரகணம் நிறைவடையும்.
எனவே நேற்று இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடப்பட்டன. கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம் என்பதால் கிரகணம் முடிந்த பின் அதிகாலை 3.15 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே சந்திர கிரகணத்தையொட்டி கோயில் கதவுகள் 8 மணி நேரம் மூடப்படும்.அதன் காரணமாக இன்று சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
கிரகண நேரத்தில் ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு செய்யப்படும். நவகிரகங்களில் நிழல் கிரகம் எனப்படும் ராகு - கேது பரிகார ஸ்தலமாகவும், வாயு லிங்கமாகவும் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயிலில் கிரகண நேரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது .