Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைப்பு

By: vaithegi Tue, 25 Oct 2022 09:07:01 AM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைப்பு ..... சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். எனவே அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்றும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

tirupati,walk ,திருப்பதி ,நடை

இதையடுத்து அந்தவகையில் தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், கிரகணம் நடைபெறும் நாளில் திருமலையில் உள்ள அன்னபிரசாத பவனில் அன்னபிரசாதம் வழங்கப்படாது என்றும், பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு திருமலை யாத்திரைக்கு திட்டமிடுமாறும் தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தியுள்ளது.

Tags :