Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நாளில் 92,238 பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நாளில் 92,238 பக்தர்கள் சுவாமி தரிசனம்

By: vaithegi Wed, 14 June 2023 3:20:18 PM

திருப்பதி கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நாளில் 92,238 பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி : புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதியில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் கடந்த மாதம் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. எனவே கூட்ட நெரிசலை சமாளிக்க தேவஸ்தானம் புதிய மாற்றம் ஒன்றை அமல்படுத்தியது.

அதனால் கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாககடந்த ஜூன் 12 -ம் தேதி ஒரே நாளில் 92,238 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதாவது தேவஸ்தானம் 1 மணி நேரத்திற்கு 5,500 பக்தர்கள் என்ற அடிப்படையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதித்தனர்

tirupati,devotees ,திருப்பதி ,பக்தர்கள்

இதையடுத்து அதன் மூலம் தினமும் 80000 பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்கின்றனர். மேலும் மக்கள் பலர் தரிசனம் செய்ய கோவிலுக்குள் கொடிக்கம்பத்திற்கு அருகில் உள்ள வெண்டி வாக்கிலி எனும் வெள்ளிக் கதவிலிருந்து ஒரே வரிசையில் பக்தர்களை கருவறைக்கு அனுப்ப ஜூன் 12 ஆம் தேதி முதல் முறையாக முயற்சி செய்யப்பட்டது.

எனவே அதன் காரணமாக 1 மணி நேரத்தில் 6250 க்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனால் அன்றைய தினம் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு 92238 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags :