Advertisement

திருப்பதி ... நாளை முதல் புதிய விதிமுறை அமல்

By: vaithegi Wed, 30 Nov 2022 3:44:10 PM

திருப்பதி ...   நாளை முதல் புதிய விதிமுறை அமல்

திருப்பதி : புதிய விதிமுறை அமல் ..... ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள். மேலும் தற்போது இலவச தரிசனம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் மிகவும் அலைமோதுகிறது.

இதனால் இவர்கள் கோவிலில் உள்ள மண்டபங்களில் இரவு முழுவதும் காத்திருந்து அதன் பின்பு சுவாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.இதனை தவிர்க்கும் பொருட்டு பக்தர்கள் விரைவிலேயே சுவாமி தரிசனம் மேற்கொள்ள வசதியாக தேவஸ்தானம் விதிமுறை ஒன்றை மாற்றியுள்ளது.

new rule,tirupati , புதிய விதிமுறை,திருப்பதி

மேலும் இது தொடர்பாக தேவஸ்தானம் அறங்காவலர் குழு வெளியிட்ட அறிவிப்பில், தற்போது அதிகாலை முதல் சுமார் 4000 பக்தர்கள் விஐபி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு கொண்டு வருகின்றனர். ஆனால் நாளை முதல் காலை 8 மணி முதல் விஐபி பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என விதிமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் இன்று முதல் மாதவம் விருந்தினர் மாளிகை கவுண்டரில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே அதன்படி இவர்கள் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு ரூ.1000 நன்கொடை செலுத்தி ரூ.500 கட்டணத்தில் சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.

இதனால் இலவச தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அத்துடன் இலவச தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் அதிகாலையில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags :