Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள விழாக்கள் குறித்த அறிக்கையை வெளியீடு

திருப்பதி செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள விழாக்கள் குறித்த அறிக்கையை வெளியீடு

By: vaithegi Thu, 01 Sept 2022 8:07:46 PM

திருப்பதி செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள விழாக்கள் குறித்த அறிக்கையை வெளியீடு

திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலையில் இருக்கும் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனையடுத்து ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் குறித்த அறிக்கையை தேவஸ்தானம் வெளியிடுவது வழக்கமாகும்.

எனவே அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள விழாக்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று ரிஷி பஞ்சமியும், வருகிற 6 மற்றும் 21ம் தேதி அன்று சர்வ ஏகாதசியும், 7ம் தேதி அன்று வாமன ஜெயந்தியும் 9ம் தேதி அன்று அனந்த பத்மநாப விரதமும், 11ம் தேதி மகாளய பக்‌ஷம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

tirupati,festivals ,திருப்பதி ,விழாக்கள்

இதை தொடர்ந்து 13ம் தேதி பிருஹத்யும விரதம் (உண்ட்ரால தத்தே), 20ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் திருவிழாவும் , 25ம் தேதி மஹாளய அமாவாசையும், 26ம் தேதி பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெற உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாத இறுதியில் 27ம் தேதி அன்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :