Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ... சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தானம் வெளியீடு

திருப்பதி ... சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தானம் வெளியீடு

By: vaithegi Sat, 24 Dec 2022 11:03:09 AM

திருப்பதி    ...    சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தானம் வெளியீடு

திருமலை: சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு .... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது.இதனை அடுத்து ஜனவரி 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும்.

எனவே இதற்காக இன்று காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளத்தில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது. மேற்கூறிய 10 நாட்களுக்கு தினமும் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.

devasthanam,tirupati,special darshan tickets ,தேவஸ்தானம் ,திருப்பதி    , சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்

ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி வருவதை முன்னிட்டு, 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம், கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது.

இதையடுத்து காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், 27-ம் தேதி காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Tags :