Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • இன்று தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விழா கோலாலகமாக கொண்டாடப்படவுள்ளது

இன்று தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விழா கோலாலகமாக கொண்டாடப்படவுள்ளது

By: vaithegi Mon, 23 Oct 2023 11:08:49 AM

இன்று தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விழா கோலாலகமாக கொண்டாடப்படவுள்ளது

இன்று ஆயுத பூஜை பெரும்பாலான இடங்களில், வீடுகளில் கொண்டாடப்படவுள்ளது. ஆயுத பூஜை என்பது நவராத்திரி விழாவின் 9-வது நாள் விழாவாகும். இந்நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு அருள் பெற பூஜைகள் செய்யப்படுகிறது.

கல்வி அறிவு பெருக புத்தகங்களை கொண்டும், தொழில்வளம் பெருக தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், எந்திரங்களை சுத்தம் செய்து பூஜை செய்வதும் வழக்கம். நவராத்திரி 9 நாளும் கொண்டாடாவிட்டாலும், இன்று சரஸ்வதி பூஜை மற்றும் நாளை விஜயதசமி என்று 2 தினங்கள் அம்மனை வழிபாட்டாலே நவராத்திரியின் முழு பலன் கிடைக்கும்.

ayudha puja festival,tamil nadu ,ஆயுத பூஜை விழா ,தமிழகம்

இதையடுத்து இன்று எந்த நேரத்திலும் ஆயுத பூஜை வழிபாட்டை நடத்தலாம். இருந்தும் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்வது நல்ல பலனை தரும். அவல் , பொரி, தேங்காய், பூ , பழம் என பூஜை பொருட்கள் வைத்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து வேலைக்கான ஆயுதங்கள், இயந்திரங்கள், வாகனங்களை சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமமிட்டு பூஜை செய்ய வேண்டும்.இன்று சரஸ்வதி பூஜை என்பதால் பூ, காய்கறிகள், பழங்கள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

Tags :