Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • நாளை திருப்பதி கோவிலில் விரைவு தரிசன டிக்கெட் ....இணையதளத்தில் வெளியீடு

நாளை திருப்பதி கோவிலில் விரைவு தரிசன டிக்கெட் ....இணையதளத்தில் வெளியீடு

By: vaithegi Mon, 01 Aug 2022 2:31:09 PM

நாளை திருப்பதி கோவிலில் விரைவு தரிசன டிக்கெட் ....இணையதளத்தில் வெளியீடு

ஆந்திரா :ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட் நாளை (ஆகஸ்ட் 2) திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து தரிசனம் செய்வார்கள். இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகள் முதல் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் என வரிசை முறையில் பக்தர்கள் அனுமதி செய்யப்படுகிறார்கள். மேலும் அதற்கு ஏற்ப முன்பதிவு தரிசன டிக்கெட்களின் விலையும் இருக்கிறது.

tirupati,ticket , திருப்பதி, டிக்கெட்

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

அதனால் முன் கூட்டியே தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாக இருப்பதை தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. இந்நிலையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விரைவு தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 2) ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :