Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு

By: Nagaraj Mon, 16 Jan 2023 6:55:15 PM

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு

திருப்பரங்குன்றம்: மண்பானை பொங்கல்... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானைப் பொங்கல் வைத்து நேற்று சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், சத்திய கீரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு 5 மண் பானைகளில் பொங்கல் வைத்து சமகாலத்தில் சிறப்பு தீப தூப ஆராதனைகள் செய்யப்பட்டது.

special pooja,manpani,pongal,worship,devotees ,சிறப்பு பூஜை, மண்பானை, பொங்கல், வழிபாடு, பக்தர்கள்

இதைத்தொடர்ந்து உற்சவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு 5 மண்பானை பொங்கல் வைத்து சிறப்புப் பூஜை நடைபெற்றது.

இதேபோல, கோயிலில் தனித்தனி சன்னதிகளில் உள்ள சண்முகர், செந்தில் ஆண்டவர், கோவர்த்தனாம்பிகை, அன்னபூரணி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், சனீஸ்வரர் மற்றும் 63 நாயன்மார்கள் பஞ்சலிங்கம் உள்ளிட்ட கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சிறிய மண்பானைகளில் பொங்கல் வைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

Tags :
|