Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடந்த தைப்பூச திருவிழா

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடந்த தைப்பூச திருவிழா

By: Nagaraj Tue, 07 Feb 2023 11:32:27 AM

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடந்த தைப்பூச திருவிழா

சிங்கப்பூர்: 2 ஆண்டுகளுக்கு பின் தைப்பூசத் திருவிழா... சிங்கப்பூரில் வாழும் ஏராளமான தமிழர்கள், கொரோனா பரவல் முடிந்து 2 ஆண்டுகளுக்குப்பின் தைப்பூசத் திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.

பக்தர்கள் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடி எடுத்தும், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தும், முகத்தில், நாக்கில், உடலில் வேல் குத்தியும் தங்கள் நேர்த்திக் கடனை முருகனுக்கு செலுத்தினார்கள். அங்குள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் நடந்த தைப்பூச நிகழ்ச்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பக்தர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் சிங்கப்பூர் மனித வளத்துறை அமைச்சர் தான் சீ லெங்கும் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.

singapore,thaipusam,festival,devotees,temple,migrant ,சிங்கப்பூர்,  தைப்பூசம், திருவிழா, பக்தர்கள், கோயில், புலம்பெயர்ந்து

அமைச்சர் தான் சீ லெங் கூறுகையில் “கொரோனா காலத்துக்குப் பின் மக்கள் இப்போதுதான் இயல்பு வாழ்க்கை வாழத் தொடங்கியுள்ளனர். கொரோனாவை வெற்றிகரமாக கடந்தது எங்கள் தேசத்துக்கும், எங்கள் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி” எனத் தெரிவித்தார்.

மனித வளத்துறை அமைச்சர் தான் சீ லெங், சீனவாசப் பெருமாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து தமிழ்பக்தர்களுடன் உரையாடினார். சிங்கப்பூரில் உள்ள பாலதண்டாயுதபானி கோயிலுக்கும் ஏாளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் அவரவர் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இங்கு இந்த இரு கோயில்களும் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.

Tags :
|