Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு விஐபி பாஸ் முழுமையாக தடை

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு விஐபி பாஸ் முழுமையாக தடை

By: vaithegi Fri, 17 Nov 2023 1:14:48 PM

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு விஐபி பாஸ் முழுமையாக தடை


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்தாண்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 20 முதல் 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்துதர உத்தரவிடப்பட்டுள்ளது.

vip,karthigai deepa festival ,விஐபி ,கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு விஐபி பாஸ் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பணியாளர்களுக்குதான் அனுமதி அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து கடந்தாண்டு பரணி தீபத்துக்கு 4 ஆயிரம் பேர், மகா தீபத்துக்கு 7 ஆயிரம் முதல் 7,500 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கூடுதலாக அனுமதிக்க சாத்தியக்கூறு இருந்தால், ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என அமைச்சர் கூறினார்.

Tags :
|