Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வீட்டில் பல்லி இருப்பதால் என்னென்ன நடக்கும் என்பது குறித்து அறிவோம்

வீட்டில் பல்லி இருப்பதால் என்னென்ன நடக்கும் என்பது குறித்து அறிவோம்

By: Nagaraj Sun, 23 July 2023 11:59:08 AM

வீட்டில் பல்லி இருப்பதால் என்னென்ன நடக்கும் என்பது குறித்து அறிவோம்

சென்னை: பொதுவாக நம் வீட்டில் ஒரு பல்லியை பார்த்தால் பலர் பயந்து சத்தமிடுவது வழக்கம். உண்மையில் பல்லி என்பது நமக்கு துன்பம் தரும் உயிரினம் அல்ல. இந்து சாஸ்திரத்தின் படி பல்லி மிகவும் மங்களகரமான ஒரு உயிரினம்.


பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன்: நமது பூஜை அறையில் ஒரு பல்லியை கண்டால் நம் வீட்டில் செல்வம் பெருகப் போகிறது என்று அர்த்தம்.

நம் வீட்டின் நுழைவாயிலில் ஒரு பல்லியை கண்டால் நமது முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைத்துள்ளது என்று அர்த்தம். நமது பித்ருக்கள் நம் வீட்டில் குடியேறி உள்ளனர் என்று அர்த்தம். அதேசமயம் நம் வீட்டின் நுழைவாயிலில் இறந்த பல்லியை பார்த்தால் அது கெட்ட சகுனத்தின் அடையாளம்.

lizard,shastras,goddess lashmi,wealth increase,earthquake ,பல்லி, சாஸ்திரங்கள், லஷ்மி தேவி, செல்வம் பெருகும், நிலநடுக்கம்

இரவில் பல்லி சொல்லும் பலன்: பல தருணங்களில் கனவுகளில் பல்லியை காண்கிறோம். கனவில் ஒரு பல்லியை நீங்கள் துரத்துவது போல் கனவு கண்டால் நீங்கள் முன் ஜென்மத்திலிருந்து முயற்சி செய்த ஒரு விஷயத்தை விரைவில் அடைவீர்கள் என்று அர்த்தம்.

இரண்டு பல்லிகள் சண்டையிடுவது போல கனவு கண்டால் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இடையே சண்டை ஏற்படும் என்று அர்த்தம். ஒரு பல்லி தரையில் ஊர்ந்து சென்றால் நிலநடுக்கம் ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.

பெரும்பாலும் நம் கண்ணில் படும் பல்லியால் நமக்கு செல்வம் பெருகும் என்றே அர்த்தம். லஷ்மி தேவி நம் வீட்டில் குடியேறுகிறார் என்று அர்த்தம் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.

Tags :
|