Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தியின் வேறுபாடுகள் என்ன?

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தியின் வேறுபாடுகள் என்ன?

By: Nagaraj Sun, 25 Dec 2022 10:49:56 PM

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தியின் வேறுபாடுகள் என்ன?

சென்னை: அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகள் இரண்டு நாட்கள் வருவதை பார்த்திருப்போம். அதேபோல் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தியின் வேறுபாடுகள் என்ன?

ஒருநாளில் முற்பகல், பிற்பகல் என்ற இரண்டு வேளைகள் இருப்பதால், முற்பகலில் வரும் திதி ஒரே நாளிலும், பிற்பகலில் வரும் திதி இரண்டு நாட்களின் பாதி நாட்களையும் பிரித்து எடுத்துக் கொள்வதால் மேற்கண்ட திதி இரண்டு நாட்களுக்கு தங்குவதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் திதிகள் அடுத்த அடுத்த நாட்களில் வருவதால் இதைப்பற்றி பெரிதாக விளக்கம் தேவைப்படுவதில்லை, ஆனால் கிருஷ்ணருக்கு கொண்டாடப்படும் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தியை இரண்டு விதமாக கொண்டாடுவது ஏன் என்ற கேள்வி பல்வேறு காலகட்டங்களில் எழக்கூடியதாக உள்ளது.

கிருஷ்ணஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று இரண்டு விதமாக கிருஷ்ணரின் பிறப்பை ஏன் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ண பக்தர்கள் மனதில் எழும் கேள்வி.

saiva,vaishnava,devotees,krishna jayanti,birthday ,சைவ, வைணவ, பக்தர்கள், கிருஷ்ண ஜெயந்தி, பிறந்தநாள்

கோகுலாஷ்டமி: ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவதாக கூறப்படுகிறது.


கிருஷ்ணஜெயந்தி: இதைப்போன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.

இது திதியை அடிப்படையாக கொண்டு சைவ, வைணவ, பக்தர்கள் பிரித்து கொண்டாடுவதாக கூறப்பட்டாலும், புராணக் கதையின்படி இன்னொரு தகவலும் கூறப்படுகிறது.

Tags :
|