Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வீரபத்திரரை எப்போது வழிபாடு செய்யலாம்? எப்படி வழிபாடு செய்வது!!!

வீரபத்திரரை எப்போது வழிபாடு செய்யலாம்? எப்படி வழிபாடு செய்வது!!!

By: Nagaraj Tue, 05 Sept 2023 12:39:54 PM

வீரபத்திரரை எப்போது வழிபாடு செய்யலாம்? எப்படி வழிபாடு செய்வது!!!

சென்னை: வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம். பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.

அகோர மூர்த்தியான வீரபத்திரர் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் பூர நட்சத்திரம் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார். இதனால் பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம். வெற்றியின் சின்னமான வெற்றிலை மாலையை ஆடிப்பூரத்தன்று சாத்துவது விசேஷ பலன்களைத் தரும்.

turmeric,rose,red,veerabhatra,counted things,betel garland ,மஞ்சள், ரோஜா, செம்பருத்தி, வீரபத்திரர், எண்ணிய காரியங்கள், வெற்றிலை மாலை

வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம். சித்திரை முதல் செவ்வாய் கார்த்திகை ஞாயிறு ஆடிப்பூரம் மாசி சிவராத்திரி தமிழ் வருடப் பிறப்பு மற்றும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகள் இவரை வழிபடுவதற்கு உரியவை. பால், தயிர், சந்தனம், வெண்ணெய் முதலியவற்றை வழிபாட்டில் பயன்படுத்தலாம். வெற்றிலை மாலை சாத்தலாம்.

மஞ்சள்,ரோஜா செம்பருத்தி தும்பை செவ்வரளி வில்வ தளங்கள் கொண்டு அர்ச்சிக்கலாம். பசும்பால் எலுமிச்சை சாறு மஞ்சள் நிற இனிப்புகளை படைத்து இவரை வழிபட எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

Tags :
|
|