Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை பெற தான் தீப வழிபாடு

தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை பெற தான் தீப வழிபாடு

By: Nagaraj Thu, 26 Nov 2020 4:18:11 PM

தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை பெற தான் தீப வழிபாடு

தீப வழிபாடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை பெறுவதற்காக தான் தீப வழிபாடு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபத்திருநாள் அன்று விளக்கு ஏற்றும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் பழைய விளக்குகள் இருந்தாலும் ஒவ்வொரு கார்த்திகை தீபத் திருநாளிற்கும் ஒரு சில புதிய விளக்குகளை வாங்குவது நல்லது. கார்த்திகை தீபத்திற்கு புதிய அகல் விளக்குகள் வாங்கி அவற்றை ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் போட்டு நான்கு மணி நேரம் ஊறவைத்து பின்பு அதை கழுவி வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும்.

lamp,karthika,loading method,veil,sandalwood ,விளக்கு, கார்த்திகை, ஏற்றும் முறை, வெயில், சந்தனம்

அதேபோல் வீட்டில் பழைய விளக்குகள் இருந்தாலும் அதை அப்படியே பயன்படுத்த கூடாது. ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி அதில் துணி சோப்பை சிறிது தூளாக்கி சேர்த்து கலந்து விட்டு அதில் இந்த பழைய அகல்விளக்குகளை போட வேண்டும்.

பிறகு இந்த நீரில் விளக்குகள் நன்கு ஊறினால் தான் விளக்குகளில் உள்ள எண்ணெய் பிசுக்கு போகும். அதன் பிறகு அனைத்து விளக்குகளையும் நன்கு தேய்த்து கழுவி வெயிலில் காயவைத்து துடைத்து எடுத்து வைக்கவும்.

பிறகு கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்குகளுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து திரிபோட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்றி விளக்கு போட்டால் நல்லது. அப்படி இல்லையென்றால் குறிப்பிட்ட விளக்குகளுக்கு நெய் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும்.

Tags :
|
|