Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பூஜை அறையில் வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்குங்கள்

பூஜை அறையில் வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்குங்கள்

By: vaithegi Wed, 23 Aug 2023 3:42:09 PM

பூஜை அறையில்  வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்குங்கள்

பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வழிபடும் முறை காலம் காலமாக பின்பற்றி வருகின்ற ஒன்று தான். ஒரு சில இடங்களில் தெய்வப் படங்களுக்கு நிகராகவே இந்த கண்ணாடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யப்படுகிறது. பூஜை அறையில் கண்ணாடி இருப்பது அத்தனை விசேஷமானதாகவும் பார்க்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இதை பெரும்பாலானோர் பின்பற்றியும் வருகிறார்கள். அப்படி வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்கும் போது தாயாரின் அனுகிரகத்தோடு சுக்கிர திசையும் சேர்த்தே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

கோடீஸ்வர யோகத்தை பெற

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை சுக்கிர கோரையில் அதாவது காலை 6 மணி முதல் ஏழு மணிக்குள்ளாக செய்து முடிக்க வேண்டும். இந்த நேரத்தில் செய்யும் பொழுது தாயாரின் அனுகிரகமும் சுக்கிரருடைய அனுகிரகத்தையும் சேர்த்து பெறலாம்.இந்த வழிபாட்டை செய்வதற்கு ஒரு மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் தாயார் பச்சை நிற புடவை உடுத்தி இருப்பது போன்ற படம் கிடைத்தால் மிகவும் நல்லது இந்த படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து வைத்து விடுங்கள். அதன் பிறகு பக்கத்தில் ஒரு வட்ட வடிவிலான கண்ணாடியை வைத்து விடுங்கள்.

mirror,prayer room ,கண்ணாடி,பூஜை அறை

அந்தக் கண்ணாடிக்கு முன்பு ஒரு சிறிய வெள்ளித் தட்டு வெள்ளித் தட்டு இல்லாதவர்கள் பித்தளை காப்பர் போன்றவற்றை காப்பர் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில்வர் தட்டை பயன்படுத்தக் கூடாது. அந்த தட்டு கொஞ்சம் பழங்கள் பூக்கள் என நிரப்பி வைத்த பிறகு அதில் முழுவதும் சில்லறை காசுகளை நிரப்பி வைத்து விடுங்கள். இந்த சில்லறை காசுகள் பழங்கள் இதற்கு இடையில் ஒரே ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி விடுங்கள்.

இந்த தட்டில் இருக்கும் பழங்கள் சில்லறை காசு தீபம் அனைத்தும் கண்ணாடியில் தெரிய வேண்டும். அத்துடன் உங்கள் முகமும் இந்த பொருட்களுடன் சேர்த்து கண்ணாடியில் தெரிவது போல் நீங்கள் அமர்ந்து தெய்வத்தை வணங்க வேண்டும். இந்த முறையில் வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்து வந்தால் தாயாரின் அனுகிரகமும் சுக்கிர யோகமும் கிடைத்து உங்கள் வீட்டில் பணமழை பொழிய தொடங்கி விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Tags :
|