Advertisement

உடல் வலியை போக்கும் உலர் திராட்சை!

By: Monisha Wed, 23 Sept 2020 2:26:33 PM

உடல் வலியை போக்கும் உலர் திராட்சை!

உலர்திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் உலர்திராட்சையுடன் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும், ஒரு கிளாஸ் அருந்தினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றப்பழம் உலர் திராட்சை. எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்து கால்சியம் தான். இந்த கால்சியம் சத்து உலர்திராட்சை பழத்தில் அதிகமாக உள்ளது.

தினமும் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன், உலர் திராட்சை பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்திவர உடல் வலி குணமாகும்.

dry grapes,body pain,health,calcium,nutrition,anxiety ,உலர் திராட்சை,உடல் வலி,ஆரோக்கியம்,கால்சியம்,ஊட்டச்சத்து,பதட்டம்

சில பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த, ஒரு சிறந்த மருந்தாக உலர் திராட்சை பயன்படுகிறது. 10 உலர் திராட்சை பழத்தை நீரில் ஊறவைத்து நன்றாக காய்ச்சி அருந்தினால் இந்த வயிற்று வலி பிரச்சனை சரியாகிவிடும்.

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

Tags :
|