Advertisement

சருமம் மிளிர உருளைக்கிழங்கு உதவும்... தெரியுங்களா!!!

By: Nagaraj Tue, 14 Mar 2023 11:09:52 PM

சருமம் மிளிர உருளைக்கிழங்கு உதவும்... தெரியுங்களா!!!

சென்னை: பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும்.

உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது.

அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்து உலக அளவில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். உருளையானது பல்லாண்டு வாழ்கின்ற பூண்டுத் தாவரமாகும். உருளையின் தரைகீழ் கிளைகளின் பருத்த நுனிப்பகுதியே கிழங்காகும்.

acne,healing,potassium,potatoes,spots , உருளைக்கிழங்கு, குணப்படுத்தம், பரு, புள்ளிகள், பொட்டாசியம்

உருளைகிழங்கில் கலோரி – 70%, புரதச்சத்து – 0 கிராம், நார்ச்சத்து – 2.1 கிராம், இரும்புச்சத்து – 0.81 மி.கிராம், கால்சியம் – 12 மி.கிராம், சோடியம் – 6 மி.கிராம், பொட்டாசியம் – 421 மி.கிராம், சர்க்கரை – 0.8 கிராம் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் B6, C போன்றவையும் நிறைந்துள்ளன.

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரதம் குறைந்த அளவும் உள்ளன. எனவே ஒல்லியாக இருப்பவர்கள் உருளைகிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

உருளையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமானமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு உருளையானது சிறந்த உணவாகும்.

வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. இவை அனைத்தும் உருளைகிழங்கில் நிறைந்துள்ளன. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

Tags :
|