Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள் வரவேண்டாம்; சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு

ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள் வரவேண்டாம்; சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு

By: Nagaraj Thu, 10 Dec 2020 10:04:17 PM

ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள் வரவேண்டாம்; சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனின் முன்பதிவு செய்யாதவர்கள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேளராவில் பெருகி வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

devasthanam board,sabarimala,booking,corona,devotees ,தேவஸ்தான போர்டு, சபரிமலை, முன்பதிவு, கொரோனா, பக்தர்கள்

இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம். அவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றிதழ் அவசியம் என தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.

Tags :
|