Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வயிற்று வலியா?...இதோ உங்களுக்காக எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

வயிற்று வலியா?...இதோ உங்களுக்காக எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

By: Monisha Fri, 10 July 2020 2:37:13 PM

வயிற்று வலியா?...இதோ உங்களுக்காக எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

வயிற்று வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவான வயிற்று வலி செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, பூச்சித் தொல்லை, வயிற்றுப் பொருமல், உணவு நச்சு முதலியவற்றால் ஏற்படுகிறது. இது மாதிரியான சாதாரண வயிற்று வலிக்குப் எளிய வீட்டு வைத்தியம் குறிப்புகளைப் பார்க்கலாம்.

வேப்பம்பூ: வேப்பம்பூவைப் பறித்து வெயிலில் காய வைக்கவும். பின் இதனைத் தூளாகப் பொடித்துக் கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து காலை மாலை என இருவேளையும் பருகி வரலாம். இதைச் செய்து வரும் பொழுது வாயு தொல்லையால் ஏற்பட்ட வயிற்று வலி குணமடையும்.

சுக்கு: சோம்பு அரைக் கப், தனியா கால் கப் மற்றும் சுக்கு ஒரு சிட்டிகை என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் மிக்சியிலோ அல்லது அம்மியிலோ போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றிக் கொண்டு, பொடியைச் சேர்த்து விடுங்கள். இதை நன்கு கொதிக்கவிடவும். அரை சொம்பு அளவிற்குத் தண்ணீர் சுண்டியவுடன், இதில் பனை வெல்லமும் பாலும் சேர்த்து அருந்த வேண்டும். இது மலச்சிக்கலைக் குணமடையச் செய்யும்.

stomach ache,lemon,home remedies,water,mint ,வயிற்று வலி,எலுமிச்சை,வீட்டு வைத்தியம்,தண்ணீர்,புதினா

எலுமிச்சை பழச்சாறு: வயிற்றில் உள்ள கோளாறை சரி செய்ய எலுமிச்சம் பழச்சாறு உதவுகின்றது. எலுமிச்சம் பழச்சாற்றை எளிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம். இந்த எலுமிச்சை பழச் சாறு வயிற்றுப் போக்கை உடனே கட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை கொண்டது.

சாதம் வடித்த நீர்: அஜீரணக் கோளாறை சரி செய்ய மற்றும் ஒரு எளிய வழி உள்ளது. இதற்குத் தேவையானது ஒரு டம்ளர் அளவு சாதம் வடித்த நீர் ஆகும். இதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் கலந்து பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றுத் தொந்தரவு குறையும்.

குப்பைமேனிக் கீரை: குப்பைமேனிக் கீரையை ஒரு கப் அளவிற்குக் கிள்ளி எடுத்துக் கொள்ளவும். அத்தோடு நான்கைந்து பூண்டு பற்களைச் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த சாற்றைப் பருகி வர வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் அழியும். வயிற்றுவலியும் நிவர்த்தி அடையும்.

stomach ache,lemon,home remedies,water,mint ,வயிற்று வலி,எலுமிச்சை,வீட்டு வைத்தியம்,தண்ணீர்,புதினா

தண்ணீர்: வயிற்றுக் கோளாறு இருக்கும் சமயத்தில் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு தண்ணீர் பருகுவதன் மூலம் வயிற்றில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். அதனால் வயிற்று வலி சீக்கிரம் குணமாக வாய்ப்புள்ளது.

இஞ்சி சாறு: இஞ்சியை நன்கு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் சாற்றுடன் சிறிதளவு தேனைக் கலந்து கொள்ளவும். இதைப் பருகுவதன் மூலம் வயிற்றுவலி குணமடையும்.

இளநீர்: இளநீர் அருந்துவதன் மூலமும் வயிற்று வலியைச் சரி செய்து கொள்ளலாம். இளநீர் வயிற்றைச் சுத்தப்படுத்தி வயிறு சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்கின்றது.

stomach ache,lemon,home remedies,water,mint ,வயிற்று வலி,எலுமிச்சை,வீட்டு வைத்தியம்,தண்ணீர்,புதினா

புதினா: புதினா தழைகளைப் பறித்துக் கொள்ளவும். இதைத் தண்ணீரில் அலசிக் கொள்ளவும். பிறகு தழைகளை நன்கு கசக்கிக் கொதி நீரில் போடவும். பிறகு இந்த நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதில் தேவைப்பட்டால் எலுமிச்சைபழச் சாற்றையோ அல்லது தேனையோ கலந்து பருகலாம். இந்த நீரை அருந்தி வர வயிற்று வலி குணமாகும்.

கற்றாழை: கற்றாழை சாற்றைப் பருகுவதன் மூலம் மலச்சிக்கல் குணம் அடையும். இந்த சற்று வழவழ தன்மையுடன் இருப்பதால் மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும். இதை ஒரு டேபிள் ஸ்பூன் என்ற அளவில் மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது.

வெற்றிலை: வெற்றிலை மற்றும் 4 மிளகுகளைச் சேர்த்து உண்பதால் வயிற்று வலி குணமடையும். இது சற்று காரத் தன்னையோடு இருந்தாலும் நல்ல பலம் கிட்டும். வெற்றிலையோடு கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் வயிற்றுப் போக்கு தொந்தரவு குணம் ஆகும்.

stomach ache,lemon,home remedies,water,mint ,வயிற்று வலி,எலுமிச்சை,வீட்டு வைத்தியம்,தண்ணீர்,புதினா

அறுகம்புல்: அறுகம்புல்லில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அறுகம்புல் மற்றும் வேப்பிலையைப் பறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளைத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் சுண்டியவுடன் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நீரைச் சிறிதளவு தினமும் குடித்து வர வயிற்று வலி குணமடையும்.

ஓமம்: ஓமத்தை நீரில் போட்டுக் காய்ச்சிக் கொள்ளவும். இந்த நீரை வடித்து எடுத்துப் பருகி வர வயிற்று வலி பூரண குணமடையும். ஓமம் ஒரு சிறந்த மருந்து வயிற்று வலி நிவாரணி என்பது குறிப்பிடத் தகுந்தது.

Tags :
|
|