Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கடும் இடுப்பு வலிக்கு சிறந்த தீர்வை அளிக்கும் இலுப்பை எண்ணெய்

கடும் இடுப்பு வலிக்கு சிறந்த தீர்வை அளிக்கும் இலுப்பை எண்ணெய்

By: Nagaraj Tue, 16 June 2020 09:45:30 AM

கடும் இடுப்பு வலிக்கு சிறந்த தீர்வை அளிக்கும் இலுப்பை எண்ணெய்

இலுப்பை எண்ணெய்யில் அடங்கியுள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது பூச்சிக்கடி நஞ்சு, சிரங்கு, விரணம், கடும் இடுப்புவலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

இலுப்பை மரம் மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் தாயகம் இந்தியா. ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப்படும். தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் காணப்படுகின்றன. தெய்வ விருட்சமாக சிவன், விஷ்ணு கோயில்களில் இந்த மரம் வளர்க்கப்பட்டு வருகிறது.

lip oil,skin health,nutrients,fermented mildew,pelvic pain ,இலுப்பை எண்ணை, சரும நலன், சத்துக்கள், புளித்த ஏப்பம், இடுப்பு வலி

இந்த மரத்தை ‘தேன் மரமென்றும் வெண்ணை மரம்’ என்றும் சொல்வார்கள். டிசம்ர் ஜனவரி மாதத்தில் இலுப்பை மரத்தின் இலைகள் உதிர்ந்து விடும். ஜனவரி,பிப்ரவரி, மார்ச் மாதத்தில் துளிர் விட ஆரம்பிக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கள் பூக்கும். ஏப்ரல் மே ஜூனில் பழங்கள் வளரும்.

ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்தில் 20 முதல் 200 கிலோ வரை விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ விதையை செக்கில் போட்டு ஆட்டினால் 300 ml எண்ணெய் கிடைக்கும். தேங்காய் எண்ணெய்க்கும், நெய்யுக்கும் பதிலாக அந்தக் காலத்தில் இந்த எண்ணெயைதான் அதிகம் பயன்படுத்தினார்கள். இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். இந்த எண்ணையை ஆங்கிலத்தில் ‘mahua oil’ என்று அழைப்பார்கள். இலுப்பை எண்ணெய் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது.

இலுப்பை எண்ணெய் கரப்பான், பூச்சிக்கடி நஞ்சு, சிரங்கு, விரணம், கடும் இடுப்புவலி போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலுப்பை எண்ணையை சற்று சூடாக்கி இடுப்புவலி, நரம்புகளின் பலவீனத்தால் உண்டான நடுக்கம், முதலிய பிரச்சனைகளுக்கு அவ்விடங்களில் நன்கு தேய்த்து வெந்நீரில் குளித்துவரக் குணமாகும்.

lip oil,skin health,nutrients,fermented mildew,pelvic pain ,இலுப்பை எண்ணை, சரும நலன், சத்துக்கள், புளித்த ஏப்பம், இடுப்பு வலி

இலுப்பை எண்ணெய்யைக் கொண்டு எண்ணெய்க் குளியல் செய்து வர நாடி நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியம் பெருகும், மேனி மிருதுவாகும். மனத்தெளிவும், சுறுசுறுப்பும் ஏற்படும். இலுப்பை எண்ணெய்யை உட்கொள்ளும்போது குடல் வறட்சி நீங்கி ஜீரணக்கோளாறு, புளித்த ஏப்பம், வயிற்றெரிச்சல் போன்றவை கட்டுப்படுத்தப்படும்.

சருமத்தின் நலனை பாதுகாப்பதில் இலுப்பை எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இலுப்பை எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போகும் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது.

Tags :