Advertisement

ஆரோக்கிய நன்மைகளை தரும் செம்பருத்தி டீ!

By: Monisha Thu, 24 Sept 2020 12:30:10 PM

ஆரோக்கிய நன்மைகளை தரும் செம்பருத்தி டீ!

காலையில் எழுந்ததும் சிலருக்கு டீ குடித்தால் தான் வேலைகளை செய்ய ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல இருக்கும். அந்தவகையில் நாம் பால் டீ குடிப்பதை விட மூலிகை டீ குடிப்பது உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது .

செம்பருத்திப் பூவினால் தயாரிக்கப்படும் டீ உடலுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. செம்பருத்திப் பூ என்பது எளிமையாக வீடுகளிலேயே கிடைக்கும். இதை வாங்குவதற்கு நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை.

செம்பருத்திப் பூ இதய நோய்க்கு சிறந்தது என்பதால் இதய நோய் கோளாறு இருப்பவர்கள் தினமும் இதை அருந்தலாம். செம்பருத்தி இலையை அப்படியே மென்று சாப்பிடுவதும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

health,red poppy tea,heart disease,gooseberry,honey ,ஆரோக்கியம்,செம்பருத்தி டீ,இதய நோய்,நெல்லிகாய்,தேன்

செம்பருத்தி டீ செய்வதற்கு தேவையான பொருள்கள்
செம்பருத்தி பூக்கள் – 5
நெல்லிகாய் – 2
இஞ்சி அல்லது சுக்கு – தேவைக்கேற்ப
தேன் அல்லது கருப்பட்டி – தேவைக்கேற்ப

செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பின் நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி மற்றும் செம்பருத்தி பூவின் இதழ்களை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதை வடிகட்டி இனிப்பு சேர்த்து அருந்துங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் இதய நோய் கோளாறுகள் விலகும்.

Tags :
|