Advertisement

தினமும் 4 மிளகு சாப்பிட்டால் நன்மை என்ன?

By: Monisha Thu, 07 July 2022 9:19:46 PM

தினமும் 4 மிளகு சாப்பிட்டால் நன்மை என்ன?

நமது சமையலறையில் இருக்கும் பல உணவு பொருட்களே, நம்மை ஒரு ஆரோக்கியமான வாழ்கைக்கு கொண்டு சென்றுவிடும்.ஆனால் அதன் மகத்துவத்தை நாம் உணர்வதில்லை. அப்படி நாம் குறைத்து மதிப்பிடம் உணவுதான் மிளகு.இந்த காரத்தன்மை கொண்ட மிளகு, வாதம் தொடர்பான நோய்களை விரட்டக்கூடியது. காய்ச்சல், இருமல், மூட்டுவலி, சுவையுணர்வின்மை போன்ற பிரச்னைகளை மிளகு தீர்த்து வைக்கும்.

புற்றுநோய் மற்றும் பக்கவாதத்தின் தீவிரத்தைக் குறைக்கும். செரிமானத்தை முறைப்படுத்தும். எந்த மருந்தை சாப்பிட்டாலும் மிளகு அந்த மருந்தின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நுரையீரல், குடல் மற்றும் மார்பகப் பகுதிகளில் வரக்கூடிய புற்றுநோயின் தீவிரத்தை மிளகு குறைக்கிறது .

pepper,eat,benefits,health , உணவு, மிளகு,நோய்,சுவை,

பாலில் மிளகுத்தூள், மஞ்சள்தூள் கலந்து குடித்தால் சலித்தொல்லை மற்றும் தொண்டை அடைப்பு குணமாகும்.

இரண்டு மிளகும் ஒரு வெற்றிலையும் கொஞ்சம் அறுகம்புல்லும் சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்புகள் காணாமல் போகும். மிளகு, நச்சு நீக்கக்கூடியது. இப்படிப்பட்ட மிளகை தினமும் குறைந்தபட்சம் நான்காவது சாப்பிடுங்கள்.

Tags :
|
|