Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • எலும்புகளுக்கு பலம் கொடுக்கும் குணம் கொண்ட பிரண்டை

எலும்புகளுக்கு பலம் கொடுக்கும் குணம் கொண்ட பிரண்டை

By: Nagaraj Thu, 27 Aug 2020 11:48:47 AM

எலும்புகளுக்கு பலம் கொடுக்கும் குணம் கொண்ட பிரண்டை

எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைப்பதுடன் ஒவ்வாமைக்கு மருந்தாகிறது.

பிரண்டையை பயன்படுத்தி எலும்புகளை பலப்படுத்தும் மருந்தை தயாரிக்கலாம்.

brandy,bone,strengthening,money,blood in the gums ,பிரண்டை, எலும்பு, வலுப்படுத்தும், பனங்கற்கண்டு, ஈறுகளில் ரத்தம்

தேவையான பொருட்கள்:

பிரண்டை பொடி, பனங்கற்கண்டு, பால். இதில் பிரண்டை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சுண்ணாம்பு தெளிவுநீரில் பிரண்டை துண்டுகளை ஊறவைத்து காயவைத்து பொடி செய்யலாம். அரை ஸ்பூன் பிரண்டை பொடியுடன், சிறிது பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிப்பதால் எலும்புகள் பலப்படும். எலும்பு முறிவு இருக்கும்போது இதை எடுத்து கொண்டால் வலி குறையும். பிரண்டையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்தை உடைய இது, ஈறுகளில் ரத்தம் கசிவை சரிசெய்யும்.

Tags :
|
|
|