Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இஞ்சியில்தான் எத்தனை மருத்துவப்பயன்கள் அடங்கி உள்ளது

இஞ்சியில்தான் எத்தனை மருத்துவப்பயன்கள் அடங்கி உள்ளது

By: Nagaraj Sat, 26 Aug 2023 11:14:03 PM

இஞ்சியில்தான் எத்தனை மருத்துவப்பயன்கள் அடங்கி உள்ளது

சென்னை: இஞ்சி வயிற்றில் வெப்பம் பெருக்கியாகவும் , வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகின்றது.

200 கிராம் அளவில் இஞ்சியை எடுத்துக்கொண்டு தோல் நீக்கி சிறிய துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரியாக 48 நாள்கள் கழித்து பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.

இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு , எலுமிச்சப் பழச்சாறு 30 மில்லி அளவுடன் தேன் 15 மில்லி கலந்து அடிக்கடி குடித்து வந்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

garlic,ginger,indigestion,medicinal benefits,mint,vitality, ,அஜீரணம், இஞ்சி, சுறுசுறுப்பு, புதினா, பூண்டு, மருத்துவ நன்மைகள்

இஞ்சி சாறினை பாலில் கலந்து குடித்தால் வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், இஞ்சி பச்சடி ஆகியவை உணவில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல், உடல் களைப்பு, மார்பு வலி நீங்கும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதக் கோளாறு நீங்கும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட வந்தால் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும், உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். தினமும் காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீர்ந்து உடல் இளமை பெறும்.

10 கிராம் அளவிலான இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் பருகி வந்தால் மார்பு வலி தீரும்.

Tags :
|
|
|