Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • படபடப்பை கட்டுப்படுத்தி...இதயத் துடிப்பை சீராக வைக்கும் 11 உணவுகள்!!

படபடப்பை கட்டுப்படுத்தி...இதயத் துடிப்பை சீராக வைக்கும் 11 உணவுகள்!!

By: Monisha Sat, 22 Aug 2020 3:47:06 PM

படபடப்பை கட்டுப்படுத்தி...இதயத் துடிப்பை சீராக வைக்கும் 11 உணவுகள்!!

தயிருக்கு இதய படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனில் இதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியச் சத்தானது மூளை மற்றும் இதயம் தொடர்பு கொள்ள உதவும் ஒரு முக்கியமான சத்தாகும். எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இதயத் துடிப்பின் வேகத்தை குறைக்கலாம்.

அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டுகளில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் உள்ளது.

அதிகமான இதயத் துடிப்பு மட்டும் பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. சிலசமயங்களில் மிகவும் குறைவான இதயத் துடிப்பு இருந்தாலும், பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், உப்புள்ள உணவுகளை சாப்பிட்டால்,சீராக வைக்கலாம். ஆனால், அதிகமான இதயத் துடிப்பு உள்ளவர்கள், உப்பை சேர்க்கவே கூடாது.

heartbeat,health,garlic,fish,mint ,இதயத் துடிப்பு,ஆரோக்கியம்,பூண்டு,மீன்,புதினா

நட்ஸில் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை பலவீனமான இதயம் உள்ளவர்கள் சாப்பிட்டால், இதயம் வலிமையாவதோடு, இதயத் துடிப்பும் சீராக இருக்கும்.

டோஃபுவில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய டோஃபு இதய படபடப்பை போக்குவதில் மிகவும் சிறந்தது. மேலும் இந்த உணவுப் பொருளில் கெட்ட கொலஸ்ட்ரால் இல்லாததால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது.

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இவை இதயத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு உணவுப் பொருளாகும். எனவே இதனை உட்கொண்டால், இதயத் துடிப்பு முறையாக இயங்கி,இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

உலர் திராட்சையிலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம்,வேகமான இதயத் துடிப்பின் அளவானது குறையும்.

heartbeat,health,garlic,fish,mint ,இதயத் துடிப்பு,ஆரோக்கியம்,பூண்டு,மீன்,புதினா

ஓட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், தமனிகளில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்திருப்பதால்,இது இதயத்தின் துடிப்பை சீராக வைக்கும்.

புதினா, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளில் முதன்மையானதாக இல்லாவிட்டாலும்,மருத்துவக்குணம் அதிகம் கொண்டது. அதிலும் இதனை சாப்பிட்டால், இதய தசைகள் வலிமையாவதுடன்,இதயத்தில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து,இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்.

பூசணிக்காயில் மக்னீசியம் என்னும் இதயத் துடிப்பை சீராக வைக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.

Tags :
|
|
|