Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • 4 உருளைகிழங்கு சிப்ஸ் 15,800 ரூபாயா..மிரண்டு போன கஸ்டமர்..

4 உருளைகிழங்கு சிப்ஸ் 15,800 ரூபாயா..மிரண்டு போன கஸ்டமர்..

By: Monisha Tue, 12 July 2022 8:12:20 PM

4 உருளைகிழங்கு சிப்ஸ் 15,800 ரூபாயா..மிரண்டு போன கஸ்டமர்..

உருளைகிழங்கு என்பது இந்தியர்களுக்கு பிடித்தமான ஒன்று.கடந்த 2021ம் ஆண்டில் நியூயார்க் நகத்தில் உள்ள Serendipity3 என்ற உணவகத்தில் தான் இந்த விலை உயர்ந்த பிரெஞ்சு பிரைஸ், கின்னஸ் சாதனையை படைத்தது.தற்போது அவை மீண்டும் உணவகத்திற்கு கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜூலை 13 அன்று தேசிய பிரெஞ்சு பிரைஸ் தினத்தினை குறிக்கும் வகையில், புகழ்பெற்ற Crème de la Crème Pommes Frites என்ற பிரெஞ்சு பிரைஸினை விற்பனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

potato,chips,customer,price ,உருளைகிழங்கு, சிப்ஸ்,கஸ்டமர்,விலை,

இதன் அமெரிக்க விலை 200 டாலர்களாகும். இந்த புகழ்பெற்ற மக்களின் விருப்பமான பிரெஞ்சு பிரைஸ், பிரீமியம் சிப்பர்பெக் உருளைக்கிழங்கில் தயாரிக்கப்படுகின்றது.இது தென் மேற்கு பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தூய்மையான வாத்து கொழுப்பில் மூன்று முறை சமைக்கப்படுகிறது.

இதில் இன்னும் கூடுதல் சுவைக்காக செர்ரியுடன், தங்க துகள்கள் (23K edible gold dust) கலந்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.மேற்கண்ட இந்த நியூயார்க் உணவகத்தில் மிக விலையுயர்ந்த பர்கரினையும் கொண்டுள்ளது. அவற்றின் விலை ஒவ்வொன்றுக்கும் 295 டாலர்களாகும். 1000 டாலர் மதிப்புள்ள ஐஸ்கிரீம் உள்ளன.

Tags :
|
|