Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மாதவிடாய் காலங்களில் வலியை குறைக்கும் 5 வகை உணவுகள்!!

மாதவிடாய் காலங்களில் வலியை குறைக்கும் 5 வகை உணவுகள்!!

By: Monisha Thu, 30 July 2020 4:54:15 PM

மாதவிடாய் காலங்களில் வலியை குறைக்கும் 5 வகை உணவுகள்!!

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் வலி அதிகரித்து காணப்படும் . மேலும் உடல்நலப் பிரச்னைகளான தலைவலி, குமட்டல், ஒற்றைத் தலைவலி, மனநிலை மாற்றங்கள், பிடிப்புகள் மாதவிடாய் வலி போன்ற பிற துணைப் பிரச்னைகளுடன் சேர்ந்து வருகின்றன. இதை சரி செய்ய 5 வகையான உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை சரியான முறையில் கடைபிடித்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளில் இருந்து தப்பித்து கொள்ளாலாம்.

1. ஊறவைத்த திராட்சை மற்றும் குங்குமப்பூ
இந்த பானத்தை வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும். கருப்பு திராட்சையும், குங்குமப்பூவும் கலந்திருப்பது மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகள் குறைய உதவும்.

2. நெய்
ஒவ்வொரு உணவிற்கும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துச் சாப்பிடலாம். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் நெய்யைச் சேர்ப்பது பீரியட்ஸ் தொடர்பான பிடிப்புகள் மற்றும் குமட்டல் ஆகியவற்றைக் குறைக்க உதவும்.

women,menstruation,pain,diets,health ,பெண்கள்,மாதவிடாய் காலம்,வலி,உணவுகள்,ஆரோக்கியம்

3. தயிர்ச் சாதம்
தயிர்ச் சாதம் என்பது பீரியட்ஸ் வலியால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு மதிய உணவாகச் சாப்பிடலாம். பருப்பு வகைகள் கொண்ட தயிர்ச் சாதம் உடலில் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. மேலும் சுவைக்காக வீட்டில் வறுத்த அப்பளத்துடன் சாப்பிடலாம்.

4. நட்ஸ்
ஒரு சில முந்திரி அல்லது வேர்க்கடலை தான் வேதனையான நாட்களில் சாப்பிட்டு வரலாம். சர்க்கரை பசி மற்றும் மனநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கு இது உதவும். இந்த சிற்றுண்டியை வெல்லம் அல்லது சர்க்கரை உடன் இணைத்தும் சாப்பிடலாம்.

5. கிச்சடி அல்லது ராகி
ராகியுடன் செய்யப்பட்ட தோசை அல்லது ரோட்டியைப் போலவே, லெகுமினஸின் தயாரிப்பு கிச்சடி, பீரியட்ஸ் நாட்களில் ஏற்றதாக இருக்கும். சபுதானா கிச்சடி ஒரு லேசான உணவாகும், இது வலியில் இருக்கும்போது சாப்பிடலாம்.

Tags :
|
|
|