Advertisement

கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் 6 வகை உணவுகள்!!

By: Monisha Wed, 15 July 2020 2:56:43 PM

கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் 6 வகை உணவுகள்!!

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு பல உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கெட்ட கொழுப்பை கரைக்க சில உணவு வகைகள் உதவுகிறது. அவற்றை தெரிந்து கொள்வோம். தினமும் ஆப்பிள் உட்கொள்ளுதல் கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

வால்நட்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் நம் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்சிதை சுழலை வழங்குவதால், இது நல்ல முறையில் கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

bad fat,apple,walnut,ginger,green tea ,கெட்ட கொழுப்பு,ஆப்பிள்,வால்நட்,இஞ்சி,க்ரீன் டீ

இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது கொழுப்பை கரைக்கும்.

காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைப்பயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து விரைவுப்படுத்தவும் உதவுகிறது.

க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டவை.

Tags :
|
|
|