Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன

70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன

By: Nagaraj Wed, 02 Aug 2023 07:12:26 AM

70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன

சென்னை: இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவதும் உண்டு.

70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான்.

தேன் பல்வேறு பூக்களில் இருந்து எடுக்கப்படுவதால் எண்ணற்ற பயன்களை நமக்கு அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தேன் ஒரு சிறந்த மருந்தாகும். தேன் சாப்பிடுபவர்களுக்கு ஆயுள் அதிகம் என்றே சொல்வார்கள். அப்படி தேன் தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தரும் என்பதை பார்க்கலாம்.

தேனில் அதிக அளவு குளுக்கோஸ் மற்றும் ஃபரக்டோஸ் உள்ளது. இதை சருமத்தில் உள்ள புண் மற்றும் காயங்களின் மீது அப்ளை செய்வதால் அது காயங்களில் உள்ள கெட்ட நீரை உறிஞ்சி வேகமாக ஆறச் செய்யும். இதிலுள்ள ஹீலிங் பண்பு மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் காயங்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வேகமாக ஆற உதவி செய்யும்.

honey,good sleep,melatonin,helps,obesity ,தேன், நல்ல தூக்கம், மெலடோன், உதவி செய்யும், உடல் பருமன்

இருமலைப் போக்கும் பாட்டி வைத்தியங்களில் இந்த தேனும் ஒன்று. நாள்பட்ட இருமலையும் சரிசெய்யும் ஆற்றல் தேனுக்கு உண்டு. தேனில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் தொண்டை மற்றும் சுவாசப் பாதையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அழித்து இருமல் மற்றும் பருவ கால நோய்களை விரட்டும் தன்மை தேனில் உண்டு.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் அல்லது வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் தேனை சேர்த்துக் குடித்து வர அது அடிவயிறு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவி செய்யும். மேலும் இதிலுள்ள ஆன்டி - செல்லுலாய்டு பண்புகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும். அதேசமயம் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இதில் கலோரிகள் மிக அதிகம்.

தேன் தினமும் எடுத்துக் கொள்வது மூலம் நல்ல தூக்கம் வரும். அதுவும் இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு ஒரு க்ளாஸில் சூடான பாலி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால் நிம்மதியாக தூங்கலாம். தேன் செரட்டோனினை உற்பத்தி செய்யும். இந்த செரட்டோனினை உடலில் மெலடோனினாக மாற்றும். இந்த மெலடோனின் தான் தூக்கத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

Tags :
|
|