Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நடைப்பயிற்சி செய்யும் போது செய்யக்கூடாத 8 விஷயங்கள்

நடைப்பயிற்சி செய்யும் போது செய்யக்கூடாத 8 விஷயங்கள்

By: Karunakaran Fri, 16 Oct 2020 8:02:54 PM

நடைப்பயிற்சி செய்யும் போது செய்யக்கூடாத 8 விஷயங்கள்

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சிகளும் அவசியம். உடனே நாளை காலை எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கி விட வேண்டாம். சரியான பயிற்சியாளர் வழிகாட்டாமல் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் இன்னும் சிக்கலே வரக்கூடும். ஆனால், நீங்கள் வாக்கிங் செல்வதற்கு யாரையும் கேட்க வேண்டியதில்லை. நீங்களாகவே பயிற்சியைத் தொடங்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக வாக்கிங் செல்லும் தூரத்தை அதிகரிக்கலாம். வாக்கிங் செல்வதால் உடல் சுறுசுறுப்பு தொடங்கி ஏராளமான பலன்கள் இருக்கின்றன.

கால்களை நீட்டி வைத்து, வேகமாக நடப்பதே கலோரிகளை எரிக்க உதவுகிறது. வாக்கிங் குரூப் தொடங்கிக் கொள்வது நல்லதுதான். நண்பர்களோடு செல்லத் தொடங்கினால் நாம் ஒருநாள் சோம்பல் பட்டாலும் அவர்கள் இழுத்துச் சென்றுவிடுவார்கள். இருப்பினும், காரசாரமான விவாதங்களை வாக்கிங் செல்லும்போது செய்யக்கூடாது. சிலருக்கு பாடலை மெதுவான ஒலியில் கேட்டுக்கொண்டே வாக்கிங் செல்ல பிடிக்கும். நல்ல பழக்கம்தான். அதற்காக வெளியே சத்தமாக இருக்கிறது என்று உங்களின் பாடல் ஒலியை அதிகரித்துகொள்ள கூடாது.

8 things,walking,health,long walk ,8 விஷயங்கள், நடைபயிற்சி, ஆரோக்கியம், நீண்ட நடை

வெளியில் சென்று சூரிய ஒளியில் வாக்கிங் செல்வதே நல்லது. சிலருக்கு அப்படிச் செல்ல வாய்ப்பும் இடமும் கிடைக்காது. ஆனால், பலருக்கு வெளியில் இயற்கையை ரசித்துக்கொண்டே வாக்கிங் செல்ல வாய்ப்பு இருக்கும். ஆனால், அதைத் தவிர்த்து வீட்டுக்குள் அல்லது ட்ரம்மில் செல்ல விரும்புவார்கள். அப்படியான சொகுசான வாக்கிங் செல்ல ஆசைப்படக்கூடாது. வாக்கிங் செல்வதற்கு என தனியாக சூ வாங்கிகொள்ளுங்கள். கால்களுக்கு ரொம்ப இறுக்கமான சூ வைத் தவிருங்கள். கால்களுக்கு மென்மையான சூ களையே தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்.

செல்லும் வழியில் ஏதேனும் கிடைத்தால் வாங்கி வருவது தவறு அல்ல. ஆனால், தினமும் அதைச் செய்துகொண்டிருக்காதீர்கள். நீங்கள் செல்வது வாக்கிங்தான் ஒழிய ஷாப்பிங் அல்ல. சிலர் வாக்கிங் செல்லும்போது புகை பிடிக்கும் பழக்கம் வைத்துள்ளார்கள். அறவே கூடாது. புகையே கூடாது. நீண்ட தூரம் வாக்கிங் செல்லும்போது கடைகள் பலவற்றைப் பார்ப்பீர்கள். உடனே சூடான வடை, பஜ்ஜி, டீ, காபி என்று குடிக்கவும் சாப்பிடம் இறங்கி விடாதீர்கள். பலரும் வாட்ஸப்பில் உரையாடிக்கொண்டே, ஃபேஸ்புக் பார்த்துகொண்டே வாக்கிங் செல்கிறார்கள். இது தவறான பழக்கம்.

Tags :
|