Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இருமல், சளி, மர்மக் காய்ச்சலை போக்கும் பாட்டி வைத்தியம்

இருமல், சளி, மர்மக் காய்ச்சலை போக்கும் பாட்டி வைத்தியம்

By: Nagaraj Sun, 26 Feb 2023 3:23:15 PM

இருமல், சளி, மர்மக் காய்ச்சலை போக்கும் பாட்டி வைத்தியம்

சென்னை: குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் இன்னமும் இருமல், சளி, மர்மக் காய்ச்சல் என்று அவதிப்படுகின்றனர்.

இந்த இருமலும், சளியும் ஒவ்வொருவரையும் வாட்டி வதைத்து விட்டுத்தான் ஓயும்.

ஒருமுறை சளி பிடித்தால் போதும் அது மெதுவே மூக்கடைப்பு, தொண்டை வறளுதலில் தொடங்கி தலைவலி, கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், வறட்டு இருமல், நெஞ்சு இரைச்சல், நல்ல தூக்கத்திலும் கூட கர்,கர்ரெனும் ஓசையுடன் மூச்சுக்குழாய்க்கும், தொண்டைக்கும் இடையே சளி அடைத்திருக்கும் உணர்வு, காது வலி என்று ஏகப்பட்ட உபத்திரவங்களில் கொண்டு விட்டு விடும். இத்தனை அவஸ்தையையும் எந்த வித நிவாரணமும் இன்றி தாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா என்ன?! தேவையே இல்லை.

இந்தத் தொல்லையிலிருந்து உடனடியாக விடுபட முடியாவிட்டாலும் சற்றே இதமாக உணர இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்திய முறைகளில் ஒன்றான பஞ்ச ரத்ன கஷாயம். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
சுக்கு - 3 சிறு துண்டுகள்மல்லி - 8 டேபிள் ஸ்பூன்மிளகு - 1 டேபிள் ஸ்பூன்நயமான பனங்கல்கண்டு - 1/4 கிலோஏலக்காய் - 5

panangalkandu,suku,jasmine,pepper,cardamom ,பனங்கல்கண்டு, சுக்கு, மல்லி, மிளகு, ஏலக்காய்

செய்முறை: சுக்கு, மல்லி, மிளகு, ஏலக்காயைத் தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். நயமான பனங்கல்கண்டு என்றால் பொதுவாக கற்கள் இருக்காது. எதற்கும் ஒருமுறை கல், தூசு சுத்தம் பார்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது வறுத்து ஆற வைத்த பொருட்களோடு பனங்கல்கண்டையும் சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைகுறையாக அல்லது சற்று கரகரப்பான பதத்தில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரைத்த சூடு ஆறிய பின் இந்தப் பெளடரை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு சளி, இருமல் தாக்கம் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கச் செல்லும் முன் வெறும் தண்ணீரில் இந்தப் பொடியை 1 டீஸ்பூன் கலந்து நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கிப் பின் நாக்கு பொறுக்கும் சூட்டுக்கு வந்ததும் அருந்தலாம். நீங்களும் இதே முறையில் செய்து அருந்தி பயன்பெறுங்கள்.

Tags :
|
|