Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் .. மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்

தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் .. மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்

By: vaithegi Sat, 20 Aug 2022 10:11:47 AM

தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் ..   மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்

நட்ஸ் பற்றிய பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். அதனுடைய நன்மைகளை, மருத்துவ பயன்களை எல்லாம் கேட்டிருப்போம். அதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் ப்ரோட்டீன் இருக்கிறது. இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான்.

அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் (Almonds) எண்ணிலடங்கா பலசத்துக்கள் உள்ளன. பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளனதினமும் ஒரு கைப்பிடி அளவு பாதம் உண்டு வருபவர்களின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு தினமும் பாதாமினை கொடுத்து வந்தால் அவர்களின் மூளை வளர்ச்சியில் நல்ல மாற்றத்தினை காண முடியும்.

பாதாமில் அதிக அளவு நார்சத்து உள்ளது. இது உடலில் அதிக அளவு சர்க்கரை உறிஞ்சுவதை தடுத்து உங்களுக்கு சர்க்கரை வியாதி வராமல் காக்கும். மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்து வரும்.

brain development,almonds ,மூளை வளர்ச்சி,பாதாம்

பாதாமில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். பாதாமில் உள்ள பொட்டாசியம் சத்து உங்களின் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.பாதாமில் அதிக அளவு ப்ரோடீன், வைட்டமின் இ, இரும்புச்சத்து, மற்றும் முடிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் முடி கொட்டுதலை தடுத்து முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் மிக மிக அவசியம். பாதாமில் அதிக அளவில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது.இவை உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் வெளியேற்றும். எனவே இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாமினை உட்கொண்டு வாருங்கள் உறவுகளே.

பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பாதாமில் கிட்டத்தட்ட 12 கிராம் அளவுக்கு நார்சத்து உள்ளது. இவை குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் மலசிக்கல் பிரச்சினையை, முற்றிலுமாக தடுக்க உதவுகின்றது.

Tags :