மன அழுத்தம், சோர்வை குணமாக்க உதவும் நீண்ட நேர குளியல்
By: Nagaraj Fri, 25 Nov 2022 10:34:20 AM
சென்னை: வெப்பமான சூழலில் நீண்ட நேரம் குளிப்பது மிகவும் அவசியம். குளித்தால் அன்றைய மன அழுத்தமும், வேலையின் சோர்வும் குணமாகும்.
உங்கள் உடலின் நீரேற்றத்தை அதிகரிக்கவும், குளிர்ச்சியடையவும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். நமது சருமத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதனால் சருமம் மிருதுவாகும்.
ஷவர் ஜெல்கள்: நமது உடலுக்கு நீா்ச்சத்தை அளிக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு உடலைக் கழுவ வேண்டும். அவை நமது சருமத்திற்கு புதுப் பொலிவையும், நமது உடலுக்கு புத்துணா்ச்சியையும் அளிக்கும். சருமத்தை மென்மையாக்குவதற்கு மிகவும் சாியான பொருள்களைத் தோ்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
குளிக்கும் போது கூல் ஷவர் ஜெல்லைப் பயன்படுத்தலாம். அது நமது சருமத்தைத்
தூண்டி, மீட்டெடுத்து, நமது சருமம் புத்துயிா் பெற உதவி செய்யும். அதோடு
சருமத்திற்குத் தேவையான குளிா்ச்சியையும் வழங்கும். அதாவது வியா்க்கும்
கோடையில், நமது சருமமானது 3 டிகிாி வெப்பநிலையில் இருப்பதைப் போன்ற உணா்வை
ஏற்படுத்தும். மேலும் நமது ஒவ்வொரு உணா்வையும் தூண்டி, நாம் குளித்து
முடித்தவுடன் நமக்கு மகிழ்வை ஏற்படுத்தும்.
உடலைத் தேய்க்கும்
பொருள்களைக் கொண்டு நமது சருமத்தை மென்மையாகத் தேய்த்தால் அல்லது
நீவிவிட்டால், நமது சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். அவை நமது
சருமத்தின் மேல் பகுதியை உாித்துவிடும். அதனால் கோடை காலத்தில்
ஏற்படக்கூடிய சரும வறட்சி பிரச்சினை குறையும்.
மேலும் அவ்வாறு
மெதுவாக நீவிவிடும் போது நமது உடலுக்கும், மனதிற்கும் ஒரு தளா்வு
கிடைக்கும். எனினும் உடலைத் தேய்ப்பதற்கு மிருதுவான பொருள்களையே
தோ்ந்தெடுக்க வேண்டும். சருமத்தில் காயங்களை ஏற்படுத்தக்கூடிய பொருள்களைத்
தவிா்க்க வேண்டும்.