Advertisement

நீரிழிவு நோயை போக்கும் தன்மை கொண்ட தூதுவளை

By: Nagaraj Sun, 30 Oct 2022 8:55:30 PM

நீரிழிவு நோயை போக்கும் தன்மை கொண்ட தூதுவளை

சென்னை: பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை செடிகளில் தூதுவளையும் ஒன்று. இதன் அனைத்து பகுதிகளும் சித்த மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது.

புரதம், கொழுப்பு, தாதுச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் தூதுவளையில் கொட்டி கிடக்கின்றது. இத்தகைய சக்திவாய்ந்த தூதுவளையை நீரிழிவு நோயாளிகள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

நீரிழிவு நோய் ஒரு முறை வந்து விட்டால் கட்டுக்குள் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விடயம் இல்லை. நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் எடுத்து கொள்ள முடியாது. சர்க்கரை கட்டுப்படாமல் இருக்கும் போது உடலில் வேறு பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

menstruation,diabetes,health,phlegm,washing ,தூதுவளை, நீரிழிவு நோய், ஆரோக்கியம், கபம், துவையல்

அத்தகைய பாதிப்பு நேராமல் காப்பதிலும் நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் தூதுவளை உதவு புரிகிறது. வாரத்துக்கு மூன்று நாட்கள் தூதுவளையை உணவில் சேர்த்து வருவதன் மூலம் நீரிழிவு கட்டுக்குள் வைக்கலாம். அல்லது இதன் சாறை குடித்துவருவதன் மூலமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

தூதுவளை இலையை அப்படியே சாறு பிழிந்து சாப்பிட முடியாதவர்கள் சமைத்து சாப்பிடலாம். முன்னோர்கள் காலத்தில் சளி, இருமல் காய்ச்சல் வந்தால் தூதுவளையை ரசம் செய்து குடிப்பார்கள். உடலில் கபத்தை கரைக்க தூதுவளையை துவையலாக்கி சாப்பிடுவார்கள்.

தூதுவளையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாகவும் செய்யலாம். இப்படி உணவில் அடிக்கடி தூதுவளையை சேர்த்து வந்ததால் தான் முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

Tags :
|
|