Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அழகை மேம்படுத்த வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை முறையில் சத்துள்ள பானம்

அழகை மேம்படுத்த வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை முறையில் சத்துள்ள பானம்

By: Nagaraj Wed, 14 Sept 2022 9:48:01 PM

அழகை மேம்படுத்த வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை முறையில் சத்துள்ள பானம்

சென்னை: முகத்தில் அடிக்கடி கட்டிகள் ஏற்படுகிறது. இது அழகை பாதிக்கிறது. வெளி அழகிற்கு நமது உணவுப் பழக்கமும் ஓர் முக்கியக் காரணமாய் அமைகிறது.


நாம் நம் உணவுப் பழக்கத்தை சீராய் அமைத்தல் அவசியம். அதற்கு எளிய முறையில் வீட்டிலேயே இயற்கை முறையில் சத்துள்ள பானம் ஒன்று தயாரிப்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கிய பானம் தயாரிக்கும் தேவையானவை:
கேரட் - 2, பீட்ரூட் - 1, பச்சை கொத்துமல்லி (மண் போக அலம்பி கட் செய்தது) - 1 கப், வெள்ளை முள்ளங்கி - 1, இஞ்சிச் சாறு - 1/2 ஸ்பூன், தேன் - 1 ஸ்பூன், தண்ணீர் - 1/2 தம்ளர்.

carrot,beetroot,coriander leaves,ginger juice,honey ,கேரட், பீட்ரூட், கொத்துமல்லி தழை, இஞ்சிச்சாறு, தேன்

செய்முறை: முள்ளங்கி, கேரட், பீட்ரூட் இவைகளை நன்றாகக் கழுவி தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். கொத்தமல்லியையும் சுத்தம் செய்து, மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி இஞ்சிச்சாறு, தேன் கலந்து பருகவும், மலச்சிக்கல் ஏற்படாது.

முகம் பளபளப்பாகும். கட்டிகள் வராது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கூடச் சாப்பிடலாம். முடிந்தால் தினமும் சாப்பிடலாம்.

Tags :
|