Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்து

புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்து

By: Nagaraj Wed, 22 Feb 2023 10:00:21 PM

புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்து

சென்னை: புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்து செயின்ட் ஜான்ஸ் வோர்ட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்றும் நிக்கோடினுக்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும் கடினமான முயற்சியாக இருக்கும். இந்த புகைப்பழக்கத்திற்கு உங்களை இழுத்துச் செல்வது எந்த காரணமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் நீங்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள்.

புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு நீங்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். நிறைய மது-புகை பழக்க ஒழிப்பு மையங்கள் நிக்கோடின் மாத்திரைகள், இ-சிகரெட்கள், பேட்ச் போன்ற பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவுகின்றன.

cigarette,mint,reliever,smoking,thought, ,எண்ணம், சிகரெட், புகைப்பிடித்தல், புதினா, விடுபட வைக்கும்

பல்வேறு மூலிகைகள் மற்றும் மூலிகை பொருட்களை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் வழிமுறை ஒன்றும் உள்ளது. முழுவதும் இயற்கையானதாகவும் மற்றும் பக்க விளைவுகள் இல்லாமலும் இருப்பதால், இந்த மூலிகை வைத்திய முறைகள் தற்போது வெகு வேகமாக பிரபலமாகி வருகின்றன.

செயின்ட் ஜான்ஸ் வோர்ட்: இது புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது உடலை அமைதிப்படுத்தவும், ஓய்வெடுக்க வைக்கவும் செய்து, நிக்கோடினின் பிடியிலிருந்து விடுபட விரும்புபவர்களின், மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் செய்யும்.

Tags :
|