Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கல்லீரல் பிரச்னைகளை எளிமையான முறையில் தீர்க்கும் வழிமுறை

கல்லீரல் பிரச்னைகளை எளிமையான முறையில் தீர்க்கும் வழிமுறை

By: Nagaraj Sat, 21 Oct 2023 4:36:04 PM

கல்லீரல் பிரச்னைகளை எளிமையான முறையில் தீர்க்கும் வழிமுறை

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் மக்களுக்கு அவசர கதியில் செல்லும் வாழ்க்கைதான் நடக்கிறது. இதனால் உணவு உண்பதில் இருந்து அனைத்திலும் அவசரம்தான். ஒரு புறம் பாஸ்ட் புட் உணவுகளால் பாதிப்பு, மறுபுறம் புகையிலை உட்பட பல்வேறு தீய பழக்கங்களால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது.

இதில் இளம் வயதினர்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற ஆரோக்கிய குறைபாட்டால் பலர் கல்லீரல் பாதிக்கப்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இப்படி கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுங்களா?

கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள்... அதாவது ஜுஸ், மோர், காபி போன்ற எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். இதை வைத்து கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும். இந்த கல்லீரல் பாதிப்பை போக்க நம் முன்னோர்கள் கடைபிடித்த வைத்திய முறைதான் இது.

liver,healing,kidney,health,plantain,cooking ,கல்லீரல், குணமாகும், சிறுநீரகம், ஆரோக்கியம், கீழாநெல்லி, சமையல்

நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து பொடி செய்து அதை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கிலோ பனைவெல்லத்தை சேர்த்து இடித்தால் இவை ஒன்று சேர்ந்து அல்வா போன்ற பதத்திற்கு வரும். இதை நாள் ஒன்றுக்கு 3 வேளையும் நெல்லிக்காயளவு எடுத்து சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.

கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும். உடல் வலுப்பெறும். கல்லீரல் கோளாறுகள் நீங்கும். இப்படி தினமும் துளசியை போட்டு வடிக்கட்டிய நீரை சாப்பிட்டு வந்தால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

இதேபோல் வாரத்திற்கு ஒருமுறை கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி இவற்றை நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து மதிய உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் பாதிக்கப்படாமல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

Tags :
|
|
|